by satheesh on | 2026-03-14 02:43 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு அருகே வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை அளித்துவிட்டு தனிநபர் அதிகாரிகள் ஆதரவோடு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு சாலை அமைத்துள்ளதாக சமூக அலுவலர்கள் புகார். பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி பெரும்பள்ளம். வனதுறைக்கு கட்டுப்பட்ட பகுதி ஆகும் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பட்டா நிலமாக இருந்தாலும் அங்கு விவசாயம் செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோபால் என்பவருடைய மகன் சசி என்பவர் தனது நிலத்தின் ஒரு பகுதியை மதுரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். வனத்துறையின் ஆதரவோடு வனப்பகுதியில் அனுமதி இல்லாமல் கனரக வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்களைச் சாய்த்து சாலை அமைத்து உள்ளனர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா வனத்துறையினர் ? தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி மரம் வெட்டி கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை மௌனம் காப்பதாக சமூக ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !