by Muthukamatchi on | 2025-03-19 02:08 PM
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி ,சக்கம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் காலனி சமுதாய கூடத்தில் ,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மனிதநேய அறக்கட்டளை ,ஏபிடி அகாடமி இணைந்து, தேனி வைகை ஐ கேர் சார்பாக இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமினை ஆண்டிபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சுமதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனைகளும், அறிவுரைகளும், அதனை தொடர்ந்து, தேவைப்பட்டோருக்கு கண்ணாடி அணிவதற்கும், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தமுகாமில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மாசி மலை, மாநிலஒருங்கிணைப்பாளர் லதா, மாநில செயலாளர் ஜெகஜோதி, மாவட்ட தலைவர் பாண்டி,ஏபிடி நிறுவனர் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!