| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான ஒன்பதாம் வகுப்பு மாணவன்....!!!

by Muthukamatchi on | 2025-03-18 08:34 PM

Share:


வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான ஒன்பதாம் வகுப்பு மாணவன்....!!!

கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, தேனி – Mobicip இணைந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு நிகழ்ச்சி – 9ம் வகுப்பு மாணவர் ஜேசன் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்!.

தேனி: கல்வி குழுமத்தின் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, தேனி, Mobicip நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு நிகழ்ச்சி (Placement Drive) மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் 9ம் வகுப்பு மாணவர் ஜேசன் J, Mobicip நிறுவனத்திலிருந்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, Cybersafety Advocate Internship பயிற்சிக்கு இணைக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

இந்த நிகழ்வை கல்வி குழுமத்தின் தலைவர் Dr. Senthilkumar தலைமையேற்று நடத்தினார். Mobicip நிறுவனத்தின் Founder & CEO திரு. Suren Ramasubbu மற்றும் Co-founder & CTO திரு. Pradeep Adhipathi, நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள (HR) நிபுணர்களுடன் நிகழ்வில் பங்கேற்றனர்.

சர்வதேச தொழில்நுட்ப வாய்ப்பு!இந்த Placement Drive மூலம், பள்ளி மாணவர்களே Mobicip நிறுவனத்தால் தேர்வு செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இதன் மூலம் மாணவர்களுக்கு Software Development, Artificial Intelligence (AI), Web Development, App Development, Tech Support போன்ற துறைகளில் உலகளாவிய தொழில்நுட்ப அனுபவம் கிடைக்கிறது.Mobicip நிறுவனத்தின் பாராட்டு!Mobicip நிறுவனத்தின் நிர்வாகம்,“இந்த வேலைவாய்ப்பு நிகழ்வின் மூலம் திறமையான மாணவர்களை அடையாளம் காண முடிந்தது. சர்வதேச தரத்தில் தொழில்நுட்ப பயிற்சியை இளம் தலைமுறையினருக்கு வழங்கும் Kalvi குழுமத்தின் முயற்சி பாராட்டத்தக்கது!” என்று தெரிவித்தனர்.கல்வி குழுமத்தின் தலைவர் கருத்து - Dr. Senthilkumar:கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வாய்ப்புகளை வழங்குகிறோம். Mobicip நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை நடத்தியது ஒரு பெருமையான தருணம்! இது மாணவர்களின் திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்!

ப ள்ளியின் பெருமை மிகு தருணம்!

இந்த நிகழ்வு, கல்வி குழுமத்தின் மாணவர்களுக்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்துடன் நேரடியாக இணையும் முதல் முயற்சி என்பதுடன், மாணவர்களின் திறமையை சர்வதேச தொழில்நுட்ப துறையில் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்பதற்கும் அடையாளமாக அமைகிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment