| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

வாக்குப்பதிவு இயந்திரம் காலாண்டு தணிக்கை....!!!!

by Muthukamatchi on | 2025-03-18 01:09 PM

Share:


வாக்குப்பதிவு இயந்திரம் காலாண்டு தணிக்கை....!!!!

தேனி மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர்   ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் காலாண்டு தணிக்கை செய்தார்கள்.இந்திய தேர்தல் ஆணையத்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் காலண்டுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில்,  இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காலாண்டு தணிக்கை செய்தார்கள். 

இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment