| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - கைதான வக்கீலுக்கு மாவு கட்டு :

by Satheesh on | 2025-03-18 10:42 AM

Share:


சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை  - கைதான வக்கீலுக்கு மாவு கட்டு :

கன்னியாகுமரி :  தக்கலை அருகே உள்ள மூலச்சல் வடசேரிவிளையை சேர்ந்த சகோதரிகளான 8ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் வீட்டை விட்டு மாயமானதாக தேடப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்.அஜித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்-இவர் வீட்டை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்த இரு சகோதரிகளை மிரட்டி கடத்திச் சென்று,ஆறாம் வகுப்பு மாணவியை தனி அறையில் அடைத்து வைத்து விட்டு,  8ம் வகுப்பு பயிலும் மாணவியை பலவந்தப்படுத்தி,  பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஜித்குமார் மீது போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில்,சிறுமிகள் இருவரும் அஜித் குமாரின் பைக்கில் ஏறிச் செல்வது சிசிடிவி மூலம் உறுதியானது. வேறு ஒரு பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படும் நிலையில்,  அப்பெண் அஜித் குமாருக்கு அடுத்த வாரம் நடைபெறவிருந்த திருமணத்தை மணமகள் நிறுத்தி விட்டார், கைதான அஜித் குமார், விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது  கழிவறையில் விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை போட்டோ எடுக்க கூடாது என மிரட்டியதாகவும், போலீசாரும் தடுத்ததாக கூறப்படுகிறது.

நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment