| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

இன்றைய கோபுர தரிசனம்....!!!!

by Muthukamatchi on | 2025-03-18 03:45 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்....!!!!

அருள்மிகு வேலப்பர் கோயில் இன்றைய சிறப்பு தரிசனம் :


தேனி மாவட்டம், ஆண்டிபட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் தெப்பம்பட்டி சிற்றூரில் அமைந்துள்ள கோயில் ஆகும். மலையில் 300 படிகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த கோயிலின் முதன்மைக் கடவுள் முருகன் ஆவார். இங்கு பளியர்களால் பூசை செய்யப்படுகிறது.


மூலவர்: வேலப்பர், முருகன்

கட்டடக்கலை வடிவமைப்பு: தென் இந்தியா.


ஆண்டுகளுக்கு முன்இக்கோயிலுக்கு அருகே ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது. இதனால் இக்கோயில் ”மாவூற்று வேலப்பர் கோயில்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

திருவிழா: இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. 

ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment