| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

வங்கி கடன்கள் கிடைப்பதில் தாமதம்....!!!

by Muthukamatchi on | 2025-03-17 05:33 PM

Share:


வங்கி கடன்கள் கிடைப்பதில் தாமதம்....!!!

அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ.ரவி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக  மீன்வளத்துறை அதிகாரியின் அலட்சிய போக்கு  காரணமாக, மீனவர்கள் வங்கி கடன் பெறுவதற்கு தடையாக உள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு தமிழக மீனவளத்துறை அமைச்சர் அவர்களும், மீன்வளத்துறை  உயரதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா?* மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய தயாராக இருந்தாலும், மீன்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக வங்கி கடன், மானியங்கள் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. சென்னை காசிமேடு மீன்பிடிதுறைமுகத்தின் உள்ள மீன்வளத் துறையில் பெயர் மாற்றம், எழுத்து பிழை, மானிய அட்டையில் பெயர் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றால் மீனவர்களை  மீன்வளத்துறை அதிகாரிகள்  அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றார்கள்.   தொடர்ந்து மின் கணணிகள், சர்வர்கள் தொடர்ந்து சரிவர இயங்கவில்லை என்று கடந்த 15 நாட்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அலட்சியப் போக்குடன் பதில் அளித்து நடந்து கொண்டிருக்கிறார்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்களும், மீன்வளத்துறை அமைச்சர் அவர்களும், மீன்வளத் துறை  உயர் அதிகாரிகளும் இதில் நேரடியாக தலையிட்டு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்ளக் கூடிய அதிகாரிகள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்* .

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment