| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

பாஸ்போர்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு...! புதிய மசோதா தாக்கல்...!

by Vignesh Perumal on | 2025-03-17 02:41 PM

Share:


பாஸ்போர்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு...! புதிய மசோதா தாக்கல்...!

இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக அளவில் மக்கள் பயண மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகள் செல்வது வழக்கமாக உள்ளது. இச்சூழலில், அந்நிய நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் தீவிரவாத அமைப்பை சார்ந்த சட்டவிரோத கும்பல் இந்தியாவிற்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது. அந்த நடமாடுவதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு புதிய சட்ட மசோதா ஒன்று அமல்படுத்தப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.


இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறையில் பிடிக்கப்படும் என்ற சட்டத்திற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 11 ஆம் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும், வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. மேலும் இச்சட்டத்தின் மூலம் சட்டவிரோத குற்ற செயல்களை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர அதீத வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment