| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!

by admin on | 2026-02-05 06:48 PM

Share:


2026 சட்டமன்றத் தேர்தல் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்....!!!!

தேனி  மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு கண்காணிப்பு அலுவலர்கள் /உதவி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள்/ உதவி  மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் /  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.                                            


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்  இன்று (05.02.2026)  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, கண்காணிப்பு அலுவலர்கள் /உதவி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள்/ உதவி  மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்    மரு. பி.சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.                                          

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கண்காணிப்பு அலுவலர்கள் நிலையில் (Nodal Officers)  மற்றும் மண்டல அலுவலர்கள் (Zonal Officer) நிலையில் குழுக்கள் அமைத்து தேர்தல்  பணிகள் மேற்கொள்ள இந்தித் தேர்தல் ஆணையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் 20 கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் 40 உதவி கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் உதவி கண்காணிப்பு அலுவலர்கள் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் மண்டல அளவில் பணிகள் மேற்கொள்ள 149 மண்டல அலுவலர்கள் மற்றும் 149  உதவி  மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம், 

வ. எண். சட்டமன்றத் தொகுதி

எண் மற்றும் பெயர் மண்டலங்களின் எண்ணிக்கை மண்டல அலுவலர்களின் எண்ணிக்கை உதவி மண்டல அலுவலர்கள் காவல்துறை அலுவலர்கள்

1 198. ஆண்பட்டி 37 37 37 37

2 199. பெரியகுளம் 35 35 35 35

3 200. போடிநாயக்கனூர் 42 42 42 42

4 201. கம்பம் 35 35 35 35

மொத்தம் 149 149 149 149

மொத்தம் 447 அலுவலர்கள் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி  மண்டல அலுவலர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்  2026-இன் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் கடமைகள் குறித்தும், வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்யுமாறும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் குறித்தும்  பயிற்சி அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 பணிகளில், அலுவலர்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து சிறப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு சுமூகமான முறையில் பணியாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல்  அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 

இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி தமிழரசி, பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன்,  இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.நல்லையா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது, வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சுருளி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment