| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"

by admin on | 2026-02-04 07:39 PM

Share:


மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....???  தற்கொலை முயற்சி....!!"

*தன்னிடம் கேட்காமல் தனது வாகனத்திற்கு இன்சூரன்ஸ் போட்டு 75 ஆயிரம் பணத்தை கட்டச் சொல்லி மிரட்டுவதாக* தனியார் நிதி நிறுவனம் மீது புகார் தெரிவித்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு*

தேனி அருகே அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் சரக்கு வாகனம்  வைத்து சரக்குகளை கொண்டு செல்லும் தொழில் செய்து வருகிறார் 



இந்த நிலையில் தனது வாகனத்திற்கு இன்சூரன்ஸ் போடுவதற்கு பல்வேறு நிதி நிறுவனத்தை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார்

அப்போது தேனி அருகே பொம்மையைகவுண்டன் பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (ஸ்ரீராம் நிதி நிறுவனம்) இன்சூரன்ஸ் போடுவதற்கு ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் தன்னிடம் எந்த ஒப்புதலும் பெறாமல் தனது வாகனத்திற்கு இன்சூரன்ஸ் போட்டுள்ளதாகவும் 

மேலும் பெட்ரோல் வாகனத்திற்கு டீசல் வாகனம் என்று மாற்றி இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளதாகவும் இதற்கு காப்பீடு கிடைக்காது என தெரிவித்துள்ளனர் இதனால் இன்சுரன்ஸ் வேண்டாம் என கூறியுள்ளார் 


இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் இன்சூரன்ஸ் போட்டு விட்டதாகவும் அதற்கான 75 ஆயிரம் ரூபாயை உடனடியாக கட்ட வேண்டும் என மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார் 

இதனால் விரக்தி அடைந்த சரக்கு வாகன ஓட்டுநர் கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்  

மேலும் தனது வாகன மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுகிறேன் என விரக்தியில் தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று அவரிடம் புகாரை பெற்றுக் கொண்டனர்

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment