| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

தமிழக தென்னை விவசாயிகளுக்கு ஜாக்பாட் - பட்ஜெட்டில்மத்திய அரசு அதிரடி.

by satheesh on | 2026-02-04 02:44 PM

Share:


தமிழக தென்னை விவசாயிகளுக்கு ஜாக்பாட்  - பட்ஜெட்டில்மத்திய அரசு  அதிரடி.

*தமிழகம்; தென்னை விவசாயத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய முக்கியமான திட்டம் - "கோக்கனட் ப்ரோமோஷன் ஸ்கீம்" பற்றி தெரியுமா..?

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த விவசாயத்தின் மூலம் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள்.  இதன் அடிப்படையில் கணக்கிடும் போது, சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இத்தகைய பெரும் தாக்கம் கொண்ட அறிவிப்பாக இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஊடகங்கள் இதை முழுமையாக எடுத்துரைக்காமல் புறக்கணித்துள்ளன. இந்த சூழ்நிலையில், பொதுமக்களாகிய நான் பட்ஜெட் விவரங்களை முழுமையாக படித்து, அதன் சாரத்தை சமூகத்திற்கு கொண்டு செல்ல  வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்திருக்கிறேன். இந்த பட்ஜெட்டில்,  நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் கோக்கனட் ப்ரோமோஷன் ஸ்கீம் என்ற புதிய திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்னை விவசாயத்தை நவீனப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இது உற்பத்தி செலவுகளை குறைத்து விவசாயிகளுக்கு நேரடி நிதி ஆதரவாக அமையும்.

2. காய்க்காத மற்றும் உற்பத்தி திறன் குறைந்த மரங்களை அகற்றிவிட்டு, உயர்தரமான தென்னை மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

3. தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஹைடன்சிட்டி பிளான்டேஷன் முறை ஊக்குவிக்கப்படும்.

4. தென்னை நர்சரிகள் அமைப்பதற்கும், புதிய தென்னை தோப்புகளை உருவாக்குவதற்கும் 75 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

5. தேங்காயை எண்ணெயாகவும், தேங்காய் பூ பவுடராகவும், இளநீர் பாட்டிலாகவும் மாற்றி மதிப்பு கூட்டல் செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். 

 6.தென்னையில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

7. உலகளவில் உற்பத்தியாகும் மொத்த தேங்காய்களில் சுமார் 55 சதவீதம் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் நிலையில், அந்த நாடுகளுக்கு போட்டியாக இந்திய தேங்காய்களுக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் உலக சந்தையில் பிரீமியம் விலை கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும்.

8. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த தேங்காய்களில் சுமார் 30 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைய போது தமிழர்கள் தான்.

9.கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விளைவிக்கப்படும் இந்த தென்னை விவசாயம் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருவதால்,  சுமார் 30 லட்சம் குடும்பங்கள் மற்றும் மொத்தமாக ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த கோக்கனட் ப்ரோமோஷன் ஸ்கீம் தென்னை விவசாயத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது.  ஆனால், இத்தகைய அறிவிப்புகள் உரிய அளவில் ஊடகங்களில் இடம்பெறாமல் திமுக பார்த்துக் கொண்டது..  மீடியாக்கள் அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் இந்த அறிவிப்பில் உள்ள அனைத்து முக்கிய புள்ளிகளையும் மறைத்துவிட்டு,  காய்க்காத மரங்களுக்கு பதிலாக புதிய தென்னங்கன்றுகள் வழங்கப்படும் எனும் ஒரு டம்மி பாய்ண்ட்டை மட்டும் போட்டு மக்களை திசை திருப்பி விட்டு விட்டார்கள்.  பொருளாதாரம் நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் மற்றும் மீடியாக்கள் என எல்லோரும் இந்த பட்ஜெட்டில் உப்பு இல்லை புளி இல்லை போண்டா இல்லை என்று கருத்து சொல்லி விட்டார்கள்..  அதை ஒரு மணி நேரத்திற்கு மூன்று முறை உடைப்பு நியூஸ் என்று சொல்லிக் சொல்லி போட்டு காட்டுகிறார்கள்..

இணை ஆசிரியர்  : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment