by admin on | 2026-02-03 08:59 PM
புதுச்சேரியில் ஒரு மின்துறை அரசு அதிகாரிக்கு மணிமேகலை வயது.40 என்ற இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி போன் செய்து பேசி வந்துள்ளார். நாளுக்கு நாள் நீண்ட நேரம் போனில் இருவருமே பேசி வந்துள்ளனர். மிகப்பெரிய அதிகாரியே தன்னிடம் வலிய வந்து பேசியதால், அவரை உ*ல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி மணிமேகலை அழைத்துள்ளார்.இதனையடுத்து புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரச்சொல்லி, அந்த மணிமேகலையுடன் உ*ல்லாசமாக இருந்துள்ளார். ஒருநாள் மணிமேகலை, எனக்கு இரண்டு தோழிகள் இருக்காங்க... அவங்க உன்னை விட வயசு குறைவு. சின்னப் பொண்ணுங்க. உனக்கு வேணுமா? என்று கேட்டுள்ளார்.அந்த அதிகாரியும் டபுள் ஓகே என சொல்லிவிட்டார்.மணிமேகலை தன் தோழிகளான சுலோசனா (திருமணமானவர்) மற்றும் சுகந்தி (28 வயது) ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அதில் சுகந்தி மீது அதிகாரிக்கு தீவிர ஈர்ப்பு ஏற்பட்டது. மணிமேகலையிடம், சுகந்தி எப்படி? அவளும் உன்னை மாதிரி என்னுடன் உ*ல்லாசமாக இருப்பாளா?" என்று கேட்டுள்ளார்.மணிமேகலை சுகந்தியிடம் அதிகாரியின் விருப்பத்தை கூறியுள்ளார். சுகந்தியும் இதற்கு ஒப்புக்கொண்டார். சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது சுலோசனா. "என் வீட்டு மாடியில் ரூம் இருக்கு. அங்க வந்து ஜாலியா இருங்க" என்றார் சுலோசனா.மணிமேகலை அதிகாரியை சுலோசனா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மாடியில் சுகந்தி காத்திருந்தார். "எனக்கு அவசர வேலை ஒன்று இருக்கிறது. நான் பிறகு வந்து பிக்-அப் பண்றேன்" என்று சொல்லி மணிமேகலை கிளம்பினார்.சுலோசனாவும் அவரது கணவர் தீனதயாளனும் இருந்தனர். "நீங்க போய் ஜாலியா இருங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் வெளியேறினர். அதிகாரியும் சுகந்தியும் தனிமையில் உ*ல்லாசமாக இருந்தனர். மறுநாள், அந்த அதிகாரியின் வாட்ஸ்அப்-க்கு ஒரு வீடியோ வந்தது. அதில் அவர் சுகந்தியுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.தீ னதயாளன் இதனை அனுப்பியிருந்தார். "இதை உன் மனைவிக்குக் காட்ட வேண்டாம்னா... உடனடியா ஒரு லட்சம் அனுப்பு என்று மிரட்டியுள்ளார்.ப யந்துபோன அதிகாரி, GPay மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால் இது தொடக்கம்தான். பணம் செலவழிந்த பிறகு, தீனதயாளனும் சுலோசனாவும் அதிகாரியின் வீட்டுக்கே வந்தனர். "எங்கள் பிரெண்ட்தான் வீட்டைப் பார்க்க வந்திருக்கோம் என்று சொல்லி மனைவியிடம் அறிமுகமாகி, மிரட்டி மேலும் 3 லட்சம் ரூபாய் பறித்தனர். மொத்தம் 4 லட்சம் போய்விட்டது.அ திகாரி மணிமேகலையிடம் சென்று புலம்பினார். மணிமேகலை கோபப்பட்டு, "ஏன் என்கிட்ட முதல்ல சொல்லல? என்று திட்டினார். பிறகு, நான் இதற்கு ஒரு முடிவு கட்டுறேன்" என்று சொல்லி, தீனதயாளன் தம்பதியிடம் பேசினார். வீடியோ திருப்பிக் கொடுக்க ரெண்டு லட்சம் கொடுத்தா போதும். இனி தொந்தரவு செய்ய மாட்டோம்" என்று சொல்லி, அதிகாரியிடம் இருந்து மேலும் 2 லட்சம் பெற்று கொடுத்தார்.அதிகாரி நிம்மதி அடைந்தார். மூன்று பெண்களுடனான தொடர்பையும் துண்டித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக வாழத் தொடங்கினார். ஆனால் சில நாட்களில் தீனதயாளன் ரவுடி ரங்கராஜனுடன் சேர்ந்து மீண்டும் மிரட்ட ஆரம்பித்தார். மேலும் 5 லட்சம் வேண்டும் என்றார்.இனி தாங்க முடியாது என்று அதிகாரி தன் மனைவியிடம் எல்லா உண்மையையும் சொல்லி அழுதார். மனைவி ஏற்றுக்கொண்டு, "இவங்களை சும்மா விடக் கூடாது" என்று சொல்லி, இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றனர்.புகார் கொடுத்த பிறகு, போலீசார் திட்டமிட்டனர். பணம் ரெடியா இருக்கு, வீட்டுக்கு வா என்று தீனதயாளனை அழைத்தனர்.தீ னதயாளன் தன் மனைவி சுலோசனாவை மட்டும் அனுப்பினார். வீட்டுக்குள் நுழைந்த சுலோசனாவை போலீசார் கைது செய்தனர். வெளியே காத்திருந்த தீனதயாளனையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது: இதற்கு மாஸ்டர் மைண்ட் மணிமேகலை தான். தன் கள்ளக்காதலனிடம் 20 லட்சத்துக்கு மேல் பணம் இருப்பதை அறிந்து, ஹனிட்ராப் சதியைத் திட்டமிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!!