by Muthukamatchi on | 2025-03-17 01:32 PM
லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளை பாதுகாக்கும் மயிலாடுதுறை தாலுகா காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை பாயுமா?
தேனி மாவட்டம் பெருமாள் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரேவதி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில்,இருவரும் மயிலாடுதுறை தாலுகா காவல் நிலையத்தில் தினசரி காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 30 நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்று நீதி அரசர் உத்தரவிட்டார்.இதன் பேரில் ரேவதி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒரு சில தினங்கள் மட்டும் மயிலாடுதுறை தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று ஆஜராகி கையெழுத்திட்ட நிலையில்,ரேவதி ஜெயபிரகாஷ் மற்றும் மயிலாடுதுறை தாலுகா காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட "புரிந்துணர்வு " ஒப்பந்தத்தின்படி ரேவதி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மயிலாடுதுறைக்கு சென்று கையெழுத்திடாமல் சொந்த ஊரான பெருமாள் கவுண்டன்பட்டியிலேயே தங்கி உள்ளனர்.இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாத பட்சத்தில் ஜாமின் ரத்தாகி விடும் என ஜாமின் உத்தரவிலேயே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவ்வாறு அவர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நீதியரசர் உத்தரவிட்டார்.ஆனால் நீதிபதியின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு,காவல் கண்காணிப்பாளர் அவர்களையும் ஏமாற்றி பணத்திற்காக காவல் ஆய்வாளர் குற்றவாளிகளை காப்பாற்றும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன்,சட்டத்தையும் காவல்துறையையும் ஏமாற்றிய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தி.முத்துக்காமாட்சி ஆசிரியர் எவிடன்ஸ் .
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!