by Vignesh Perumal on | 2026-02-03 03:03 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னையில் இன்று (பிப்ரவரி 3, 2026) அளித்த பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ஜெயக்குமார்: "தன்னுடைய கட்சியால் 41 உயிர்கள் பறிபோயுள்ளன என்ற எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் விஜய் நடனமாடுகிறார். அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதைப் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்? அவருக்குப் பொறுப்புணர்வும் இல்லை, முதிர்ச்சியும் இல்லை."
தவெக-வின் சின்னம் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகளைக் கிண்டல் செய்த அவர்: "தவெக-வினர் இன்று ஆபத்தில் உள்ளனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் விசில் அடிக்கின்றனர்.
டைட்டானிக் படத்தின் இறுதியில் நாயகி உதவி கோரி விசில் அடிப்பார். அதுபோல, வரும் தேர்தலில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளக் கூட்டணி கேட்டு விஜய் விசில் அடித்துக் கொண்டிருக்கிறார்."
விஜய்யின் வருமானம் குறித்துக் கடுமையான கேள்விகளை ஜெயக்குமார் எழுப்பினார்.
"விஜய் சினிமாவுக்காக வாங்கும் சம்பளம் கறுப்பா அல்லது வெள்ளையா என்பதை அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? எங்களுடைய கணிப்புப்படி அதில் கறுப்பு அதிகம், வெள்ளை குறைவு.
தவெக என்ற கட்சியே லாட்டரி பணத்தில்தான் இயங்குகிறது. லாட்டரி அதிபர்களின் நிதியுதவியுடன் கட்சியை நடத்திக்கொண்டு, ஊழலைப் பற்றிப் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் அரசியல் வருகையைத் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒரு பிரபல்யமான காமெடி காட்சியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
"தமிழகத்தில் உண்மையான போட்டி என்பது திமுக-விற்கும் அதிமுக-விற்கும் இடையேதான். ஆனால், இடையில் புகுந்து 'நானும் ரவுடிதான்' என்று சொல்லும் வடிவேலுவைப் போல, தானும் ஒரு பெரிய அரசியல்வாதி என விஜய் காமெடி செய்து கொண்டிருக்கிறார்."
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கூட்டம் கூடியதால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதும், சமீபத்தில் விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!!