by Vignesh Perumal on | 2026-02-03 02:47 PM
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
வீட்டிலேயே முடங்கி இருப்பது எடுபடாது" விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "ஒரு கட்சியின் தலைவர் என்பவர் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். ஆனால், விஜய் பனையூரில் உள்ள தனது வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது அரசியலில் எடுபடாது. மக்களைச் சந்திக்காமல், அவர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்காமல் வீட்டிலிருந்தே அறிக்கை விடுவது முதிர்ச்சியான அரசியல் அல்ல" என்று சாடினார்.
மேலும் அவர் பேசுகையில், "சினிமா வேறு, அரசியல் வேறு. சினிமாவில் கைதட்டல் வாங்குவது எளிது; ஆனால் அரசியலில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம். தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற திரையுரைத் தலைவர்களைப் பார்த்தவர்கள். அவர்களின் காலமே வேறு. இன்று மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். சினிமாவில் காட்டும் பிம்பத்தை வைத்து மட்டும் மக்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
"அரசியல் களத்திற்கு வரட்டும், வெயிலிலும் மழையிலும் மக்களுக்காகப் போராடட்டும். அப்போதுதான் அவருக்கு அரசியலின் ஆழம் புரியும்.
திமுக என்பது பல போராட்டங்களைக் கடந்து வந்த இயக்கம். எத்தனையோ புதுக் கட்சிகளை நாங்கள் பார்த்துவிட்டோம். சினிமா செல்வாக்கை மட்டும் நம்பி வரும் கட்சிகளால் திமுகவின் கோட்டையை அசைக்க முடியாது.
தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையான அரசியலையும் பார்த்துவிட்டனர். வெற்று முழக்கங்கள் மற்றும் திரை பிம்பங்கள் அவர்களிடம் இனி எடுபடாது" என உறுதிபடத் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தவெக இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் களத்திற்கு வருவதில்லை என்ற விமர்சனத்தை திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இதற்குப் பதிலடியாக, "நாங்கள் அமைதியாக வேலை செய்கிறோம், மக்கள் முடிவெடுப்பார்கள்" என்பதே தவெக நிர்வாகிகளின் நிலைப்பாடாக உள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!