by admin on | 2026-02-02 06:59 PM
*போலி பல்பு விற்ற கோவை தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனம் : ரூ.40 ஆயிரம் அபராதம் - நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: வழக்கறிஞர் இன்றிப் போராடி வென்ற கார் உரிமையாளர் !!!*
விலை உயர்ந்த காருக்கு போலி ஹெட்லைட் பல்புகளை விற்று ஏமாற்றிய கோயம்புத்தூர் உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு ரூ.40,850 அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது 'டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ்' காருக்காக, கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சீனிவாசன் பொன்னுசாமி, பிரமிளா ஆகியோருக்கு சொந்தமான தனுக்கோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு பிலிப்ஸ் பல்புகளை வாங்கியுள்ளார். சுமார் 3,000 ரூபாய் கொடுத்து வாங்கிய அந்த பல்புகள், அடுத்த சில மாதங்கள்லேயே பழுதாகியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பிலிப்ஸ் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார். புகாரை விசாரித்த நிறுவனம், அவருக்கு இரண்டு பல்புகளை இலவசமாக வழங்கியது. அப்போது
தான், தான் முதலில் வாங்கிய பல்புகள் அசல் அல்ல, அவை போலியானவை என்பது பிரபுவுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து கடையிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, "பரிகாரம் கிடைத்து விட்டது, இதற்கு மேல் நீதிமன்றம் போனால் சரியிருக்காது" என மிரட்டும் தொணியில் பதில் வந்து உள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த பிரபு, நீதிமன்றம் செல்ல முடிவு செய்தார்.வழக்கறிஞர்கள் பலரும் "இந்த வழக்கு நிற்காது" எனக் கைவிரித்த நிலையிலும், பிரபு மனம் தளரவில்லை. இணையதளம் மற்றும் 'யூடியூப்' உதவியுடன் நுகர்வோர் சட்டங்களை முறையாகக் கற்றுக் கொண்டார். போலி பல்புகளின் அட்டைப்பெட்டி, அதில் இருந்த பார்கோடு,
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!