by admin on | 2026-02-02 04:27 PM
தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்....!!!
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்*
கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளருக்கு,வளர்ப்பு கூலி கிலோவுக்கு 20 ரூபாய் வழங்க கோரி, கண்ணில் கருப்பு பட்டை கட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டாயப்படுத்தி குஞ்சுகளை இறக்குவதை தடுக்கவும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகசாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனு, தேனி ஆட்சியர ரஞ்சித் சிங்கிடம் வழங்கப்பட்டது. இது குறித்த ஆய்வுக்கும் விசாரணைக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!