by Vignesh Perumal on | 2026-02-02 03:13 PM
பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த விஜய், அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகம் இன்று தமிழ்நாட்டில் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு நீங்களும், என்னை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களுமே காரணம். உங்களை நம்பித் தான் நானும், நமது இயக்கமும் இருக்கிறது. இது உழைப்பால் உருவான இயக்கம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசியதாவது, "விஜய்க்கு என்ன தெரியும் என இன்று கேட்கிறார்கள். அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கட்சி தொடங்கிய போதும் இதே போன்ற கேலிப் பேச்சுகளையும், கிண்டல்களையும் அவர் எதிர்கொண்டார். ஆனால் மக்கள் ஆதரவு என்ன என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். அந்த வரலாறு நமக்கும் பொருந்தும்."த ற்போதைய அரசியல் சூழலை விளக்க எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை விஜய் மேற்கோள் காட்டினார்." 1977 ஜூன் மாதம் வானொலியில் பேசிய எம்.ஜி.ஆர் அவர்கள், 'பேரறிஞர் அண்ணா அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் அமர்ந்துவிட்டார்களே' என வேதனைப்பட்டு கண்ணீர் வடித்தார். அந்த கண்ணீரைத் துடைக்கவே அதிமுக எனும் இயக்கம் உருவானது.அ தேபோல, 2017 மற்றும் 2021-க்குப் பிறகு தமிழகத்தின் நிலையைக் கண்டு மக்கள் வேதனைப்படுகிறார்கள். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்கள் அமர்ந்த இடத்தில், தகுதியற்றவர்கள் அமர்ந்துவிட்டார்களே என மக்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர்."த ன்னுடைய பேச்சால் அரசியல் வட்டாரத்தில் ஏற்படும் சலசலப்புகள் குறித்துப் பேசிய விஜய், "மக்களின் கண்ணீரைத் துடைக்கவே தமிழக வெற்றிக் கழகம் பிறந்துள்ளது. நான் இப்படிப் பேசுவதைக் கேட்டுச் சிலர் கொந்தளிப்பார்கள். அவர்கள் கொந்தளிக்கட்டும், அதுதான் அவர்கள் வேலை. அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம்."வி ஜய்யின் இந்தப் பேச்சு, ஆளும் திமுக அரசை (2021 ஆட்சி மாற்றம் மற்றும் 2017-க்குப் பிந்தைய அரசியல் சூழலைக் குறிப்பிட்டு) மிகக் கடுமையாக விமரிசிப்பதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திராவிட மரபின் முன்னோடிகளான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரைத் தனக்குச் சாதகமாக முன்னிறுத்துவதன் மூலம், அவர் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான விதையைத் தூவுகிறார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!