by Vignesh Perumal on | 2026-02-02 02:54 PM
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் ரகுபதி, இது தமிழர்கள் மீதான பாஜகவின் வன்மத்தையே காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி. வழக்கமாக பட்ஜெட்டின் போது தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களைக் கவரச் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தை பாஜக அரங்கேற்றும். ஆனால், தமிழ்நாடு என்று வரும்போது அந்த நாடகத்தைக் கூட அவர்கள் நடத்தத் தயாராக இல்லை. தமிழ்நாட்டைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளனர்.எ வ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். அந்த விரக்தியாலேயே பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.நி தி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பெயருக்காகத் தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்திருக்கிறார். பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகள் கண்காணிப்பு கோபுரங்கள் போன்ற சிறு அறிவிப்புகள் மாநிலத்தின் பெரிய பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யாது."மா நிலங்களுக்கான வரிப்பகிர்வை 41% சதவீதத்திலிருந்து 50% சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.ச மக்ரா சிக்ஷா திட்டத்திற்கான ரூ. 3,548 கோடி மற்றும் ஜல்ஜீவன் திட்டத்திற்கான ரூ. 3,112 கோடி நிலுவைத் தொகையை விடுவிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.அ மைச்சர் தனது அறிக்கையில், "ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று எச்சரித்துள்ளார்.மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 9% பங்களிப்பை வழங்கும் தமிழ்நாட்டிற்கு வெறும் 4% வரிப்பகிர்வை மட்டுமே வழங்கி, ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும் அவர் சாடியுள்ளார்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்.....!!!!!
மதக்கலவரம் தகவல், 144 தடை...! கோர்ட்டில் கலெக்டர் தரப்பு வாதம்...!
மனைவிக்கு நோய் பாதிப்பு...! கணவன் செய்த செயல்...! குடும்பமே அழிந்தது...! பெரும் சோகம்...!
2 ஊழல் வழக்கு...! 10 ஆண்டுகள் சிறை...! முன்னாள் பிரதமருக்கு கோர்ட் உத்தரவு...!
விஜய்க்கு என்ன தெரியும்..! மக்களே எனது பலம்..! 3-ஆம் ஆண்டு..! விஜய் உற்சாக பேச்சு...!