| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!

by Vignesh Perumal on | 2025-12-24 01:23 PM

Share:


2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடாக மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (டிசம்பர் 25) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 26) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் சுமார் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் அவர் உரையாற்றுகிறார்.

முதல்வரின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் நாளை (25.12.2025) மற்றும் நாளை மறுநாள் (26.12.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது."

இந்த உத்தரவை மீறி ட்ரோன்களைப் பறக்கவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் விழா நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். முதல்வரின் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய ஆட்சியரகம் திறக்கப்பட உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.













நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment