| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் BJP

நன்கொடை - முந்தும் பாஜக - காங்கிரஸின் நிலை .....?

by satheesh on | 2025-12-23 10:52 PM

Share:


நன்கொடை -  முந்தும் பாஜக - காங்கிரஸின் நிலை  .....?

2024–25 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி ரூ.6,088 கோடி நன்கொடைகள் பெற்றுள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நன்கொடை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.522 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளது. இந்த கணக்கின் படி, காங்கிரஸை விட பாஜக பெற்ற நன்கொடை தொகை சுமார் 12 மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த 2023–24 நிதியாண்டில் பாஜக ரூ.3,967 கோடி நன்கொடை பெற்றிருந்த நிலையில், 2024–25ல் அந்த தொகை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. பாஜக பெற்ற நன்கொடைகளில் பெரும்பகுதி தேர்தல் நம்பிக்கை அறக்கட்டளைகள் (Electoral Trusts) மூலம் வந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகும், பாஜக நன்கொடைகளில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. 2024–25 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியின் நன்கொடைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment