| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்...!!! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி...!!

by admin on | 2025-12-23 09:27 PM

Share:


கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்...!!! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி...!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...!!!

கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 78 தற்காலிக சோதனைச்சாவடிகள் மற்றும் 5 Highway Patrol, 7 Crime Control Patrol, 5 Emergency Response Patrol, 5 Four wheeler Patrol, 30 Mobile Patrol, 2 Tourist Patrol ஆகிய நான்கு சக்கர ரோந்துகள் 27 இருசக்கர வாகன ரோந்து அமைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் காவல்துறை தீவிரமாக கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ. அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R.ஸ்டாலின் IPS* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

விபத்து தடுப்பு நடவடிக்கைகள்.

18 வயதிற்க்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு:

18 வயதிற்க்கு கீழ் வாகனம் ஓட்டிய இளஞ்சிறார்களின் பொற்றோர்கள் மீது இந்த ஆண்டு மட்டும் 108 வழக்குகள் 281 BNS Act, 199 A MV Act ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்.

Breath Analyser சோதனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறியும் Breath Analyser கருவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அனைத்து தற்காலிக சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி.

பண்டிகைக்கால Shopping போன்றவைகளுக்கு பொதுமக்கள் அதிகமாக பயணம் செய்வதால் அவர்களுடைய பயணத்தினை போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்வதற்க்கு மாவட்ட காவல்துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அதிகமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தக்கூடிய Road Side Parking போன்ற விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை அதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் வாகனத்தை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

திருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பண்டிகை காலங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க சீருடை இல்லாத சாதாரண உடையில் போலீசார் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குற்றத்தடுப்பு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களும் தங்களது உடமைகள் நகைகள் ஆகியவற்றை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும், வெளியூர்களுக்கு செல்லும் போது தங்களது வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும், அருகில் உள்ள காவல் நலையத்திற்கு தகவல் கூறியும் செல்ல வேண்டும்.

இசை நிகழ்சிகள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள்.

மக்கள் கூடும் இடங்கள், கடற்கரை போன்ற பொது இடங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அனுமதி இல்லாமலோ அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலாகவோ நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு.

பொதுமக்கள் பண்டிகை காலத்தினை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும். திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment