by admin on | 2025-12-23 08:10 PM
தேனி மாவட்டம்மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, தேனி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் ஆண்டிபட்டிப் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் உராட்சிப் பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆண்டிபட்டி உராட்சி ஒன்றியம் தெப்பம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகளையும், தேனி ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பள்ளி வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தெப்பம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.17 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகளையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தப்புக்குண்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42.39 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பெரியாற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, மார்க்கையன் கோட்டை அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து, நீர் எடுக்கப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ள குடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தப்புக்குண்டு அருகில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32.15 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை முதல் வெங்கடாச்சலபுரம் வரை சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள இருவழி சாலையினை நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இவ்வாய்வில் பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., செயற்பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம்) திரு.பார்த்திபன், திட்ட அலுவலர் (சிப்காட்) திரு.சித்திரைவேல், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.வில்லியம் ஜேசுதாஸ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.குமணன், உதவி கோட்டப்பொறியாளர் திரு.திருக்குமரன், உதவி செயற்பொறியாளர்கள் திருமதி செல்வி (குடிநீர் வடிகால் வாரியம்), திரு.பூம்பாண்டியன் (ஊ.வ), திரு.வெங்கடேசன்(ஊ.வ), திரு.மணிமாறன் (பேரூராட்சிகள்) உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) திரு.ராஜசேகரன், இளநிலைப் பொறியாளர் திரு.சதாசரம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!
ரூ.3,000 லஞ்சம்...! பெண் அதிகாரி கையும் களவுமாக கைது..!
தங்கம் விலை மீண்டும் உயர்வு...! புதிய உச்சம்....!
முதல் பெண் சிஇஓ...! சரோஜினி பத்மநாதன் இன்று பொறுப்பேற்பு..!
எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...