by admin on | 2025-12-23 07:35 PM
தேனி மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பாகவாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (23.12.2025), தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.கோவிந்தராவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று, தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201.கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 04.11.2025 முதல் 14.12.5025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று, கணக்கெடுப்புப் படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்திசெய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலானது 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை மேற்கொள்ளவும், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் தொடர்பான முதற்கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும் மற்றும் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் 03.01.2026 (சனிக்கிழமை), 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் 1394 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
இம்முகாம்களை வாக்காளர்கள் தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர் இடம்பெறுவதை வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO’s), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்(AERO’s), வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO’s) மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA’s) உறுதிசெய்து கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள், தேனி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளான பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனி சோலைமலை அய்யனார் கோவில் தெரு, டிவிஎஸ் தெரு, டிபி தெரு, லட்சுமிபுரம் மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாழையாத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் களப்பணிகள் மேற்கொண்டு, வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கெடுப்புப் படிவங்களை சுழற்சி முறையில் பார்வையிட்டு, எந்த ஒரு தகுதியான வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் வாக்காளர் பதிவு அலுவலர் / பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.நல்லையா, வாக்காளர் பதிவு அலுவலர் / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி கவிதா, வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சுருளி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வட்டாட்சியர்கள் திரு.சதீஸ்குமார் (தேனி), திரு.மருதுபாண்டி (பெரியகுளம்), திரு.சந்திரசேகரன் (போடிநாயக்கனூர்), திரு. ஜாஹிர் உசேன் (ஆண்டிபட்டி), திரு.கண்ணன் (உத்தமபாளையம்) உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / நகராட்சி ஆணையாளர்கள் செல்வி பார்கவி (தேனி-அல்லிநகரம்), திரு.உமாசங்கர் (கம்பம்), திருமதி தமீஹா சுல்தானா (பெரியகுளம்), திருமதி சுதா (போடிநாயக்கனூர்), திருமதி முத்துலெட்சுமி (கூடலூர்), திரு.கோவிநாத் (சின்னமனூர்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO’s) மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA’s) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை...! கலெக்டர் அதிரடி அறிவிப்பு...!
ரூ.3,000 லஞ்சம்...! பெண் அதிகாரி கையும் களவுமாக கைது..!
தங்கம் விலை மீண்டும் உயர்வு...! புதிய உச்சம்....!
முதல் பெண் சிஇஓ...! சரோஜினி பத்மநாதன் இன்று பொறுப்பேற்பு..!
எடப்பாடியுடன் இணைய மாட்டோம் .! - தகுந்த பாடம் புகட்டுவோம் .!! O P S ...