| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம் - C C T V காட்சி வெளியாகி அதிர்ச்சி - விசாரணைக்கு கேரளா அரசு உத்தரவு :

by satheesh on | 2025-12-22 11:03 PM

Share:


கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம்  - C C T V காட்சி வெளியாகி அதிர்ச்சி  - விசாரணைக்கு கேரளா அரசு உத்தரவு  :

கேரளா - எர்ணாகுளம் : ஒரு ஹோட்டலில் இரண்டு போலிஸார் மப்டியில், ஒருவரை தாக்கியதை பெஞ்சமின் என்பவர் வீடியோ எடுத்துள்ளார். இதை கண்ட அந்த போலிஸார்கள் பெஞ்சமினை அரூர் போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த பெஞ்சமினின் கர்ப்பிணி மனைவி ஷைஜுமோள் கை குழந்தையுடன் கணவனை காண போலிஸ் ஸ்டேசனுக்கு வந்துள்ளார். அங்கு கணவன் பெஞ்சமினை தாக்கியதை கண்ட ஷைஜூமோள், வாக்குவாத்தில் ஈடுபட கணவனின் கண்முன்பே உதவி ஆய்வாளர் பிரதாபச்சந்திரன் கர்ப்பிணி பெண் என்று கூறியும் கேட்காமல் அப்பெண்ணின் மார்பில் கை வைத்து தள்ளி கன்னத்தில் அறைந்தது மட்டுமின்றி, அப்பெண்ணும் கணவனும் காவல்நிலையத்தின் பொருட்களை சேதப்படுத்தி காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக வழக்கு பதிவு செய்துள்ளார். 2024 ல் இந்த சம்பவம் நடந்தது. ஷைஜுமோள் நீதிமன்றத்தை நாடி ஒரு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள் இப்போது உண்மையை நிரூபித்துள்ளன. கேரளா முதலமைச்சர் கவனத்திற்கு செல்ல முதற்கட்டமாக உதவி ஆய்வாளர் பிரதாபச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்தது மட்டுமின்றி விரிவான விசாரனைக்கு உத்திரவிட்டுள்ளார்.

செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment