| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

3 மகள்களை அரிவாளால் வெட்டிக்கொலை...! தந்தை தற்கொலை...!

by Vignesh Perumal on | 2025-08-05 10:51 AM

Share:


3 மகள்களை அரிவாளால் வெட்டிக்கொலை...! தந்தை தற்கொலை...!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிக கடன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், தந்தை ஒருவர் தனது மூன்று மகள்களை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36). இவர் தனது வீடு கட்டுவதற்காக அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை தனது மகள்களான பிரகதிஸ்ரீ (9), ரித்திகாஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகிய மூன்று பேரையும் கோவிந்தராஜ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதிகக் கடன் காரணமாகவே இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment