by Vignesh Perumal on | 2025-08-04 10:13 AM
திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று 11-ஆம் வகுப்பு மாணவன் முகிலன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இன்று (ஆகஸ்ட் 4, 2025) ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த முகிலன் என்ற மாணவன், நேற்று பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பு கருதி, பள்ளி நிர்வாகம் இன்று ஒரு நாள் மட்டும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அதேசமயம், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்