by Vignesh Perumal on | 2026-02-07 01:35 PM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான ஐந்தே மாதத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் கெளசல்யா இவருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டுத் திருமணம் நடைபெற்றது. இருவரும் பொன்னேரி அருகே வசித்து வந்தனர்.
இன்று காலை கெளசல்யா தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கெளசல்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார், கெளசல்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 5 மாதங்களிலேயே இளம்பெண் உயிரிழந்துள்ளதால், இது குறித்து அவரது கணவர் ராஜேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்ட விதிமுறைப்படி, திருமணமான 7 ஆண்டுகளுக்குள் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தால், அது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன்படி, இந்த வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கெளசல்யாவின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையோ அல்லது குடும்பத் தகராறோ காரணமாக இருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!