by admin on | 2026-02-08 12:29 PM
தேசிய அளவில் முக்கிய பொறுப்பு... நிர்வாக பட்டியலில் அண்ணாமலை பெயர்...
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதவி காலம் முடிந்து தலைவர் பதவி மாற்றம் செய்யப்பட்டது. அண்ணாமலை தலைவர் பதவி மாற்றம் செய்யப்பட்ட போதே, அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழக பாஜக மாநில தலைவர் மாற்றம் நடந்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
ஆனால் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பில் தாமதமாகி வந்ததால் , தேசிய நிர்வாக பட்டியல் வெளியாவதில் தாமதமானது, பாஜக தேசிய தலைவர் நியமிக்கப்பட்டதும் வெளியாக இருக்கும் தேசிய நிர்வாக பட்டியலில் அண்ணாமலை பெயர் நிச்சயம் இடம் பெரும் என்று இதற்கு முன்பே டெல்லியில் இருந்து நமது தினசேவல் நியூஸுக்கு கிடைக்கும் தகவல் உறுதி படுத்துகிறது என்று தொடர்ந்து நமது தினசேவல் நியூஸில் செய்தி வெளியிட்டு வந்திருதோம்.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்தார், இதில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டு இருந்தார், ஆனால் தீடிரென தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 6 சட்டமன்ற பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்து இருந்தது மிக பெரிய விவாத பொருளாக மாறியது.
அண்ணாமலை அதிருப்தியின் காரணமாக சட்டமன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகினார் என்று திமுக ஆதரவு ஊடகங்கள், பாஜகவில் உட்கட்சி பிரட்சனை இருப்பது போன்று கட்டியமைக்க முயற்சி செய்தன, ஆனால். அது முற்றிலும் தவறு என்றும், அண்ணாமலையின் தந்தை கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உறுதியாகியுள்ளது, இதன் காரணமாக தன்னுடைய தந்தையை உடன் இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் சட்டமன்ற பொறுப்பாளர் பதவியை துறந்து இருக்கிறார் அண்ணாமலை என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தேசிய நிர்வாக பட்டியல் தயார் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. குறிப்பாக தேசிய தலைவர் நியமனம் அறிவிப்புக்கு முன்பே தேசிய பொதுச் செயலாளர், தேசிய துணை தலைவர் போன்ற பதவிகளுக்கான தேசிய நிர்வாக பட்டியல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்கிற தகவல் வெளியானது.
தற்பொழுது இறுதி கட்ட பணிகள் முடிந்து விரைவில் பாஜக தேசிய நிர்வாக பட்டியல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சமீபத்தில் அண்ணாமலையை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தேசிய நிர்வாக பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரையும் பட்டியல் வெளியாவதற்கு முன்பு தொடர்பு கொண்டு ஆலோசனை நடந்தி வருகிறார் நிதின் நபின் என உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.
அந்த வகையில் தான் அண்ணாமலையை தொடர்பு கொண்டு நிதின் நபின் ஆலோசனை நடத்தியாக தகவல் வெளியாகி இருக்கிறது, இந்நிலையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், அதனால் தான் நிதின் நபின் இது தொடர்பாக அண்ணாமலையை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.