by admin on | 2026-02-08 01:07 PM
கடந்த 26 .10 .2023 அன்று நீலகிரி மாவட்டம் மசனகுடி காவல் பொறுப்பு ஆய்வாளரான திரு சாகுல் அமீது அவர்கள் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக தன்னுடைய போலீஸ் பார்ட்டியுடன் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் மசனகுடி கக்கநள்ளா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் இருந்த பொழுது சோதனை சாவடியை நோக்கி KL 11 AY 2200 என்ற பதிவெண் கொண்ட Ford Ecosport கார் ஒன்று வேகமாக வந்ததை கண்டு அந்த காரை தடுத்து நிறுத்தி பார்க்கையில் அதன் உள் நான்கு இளைஞர்கள் இருந்ததை பார்த்து அவர்களது பெயர் விலாசங்களை கேட்க அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி பின்னர் தங்களது பெயர்களை 1,முனீர் காட்டில் புரம்(34) த/பெ மொய்தீன் காட்டில் புரம் மலப்புரம் கேரள மாநிலம் என்றும், 2, பாசில் ஜமான் (26),த/பெ அப்துல் நாசர் மலப்புரம் கேரள மாநிலம் என்றும், 3, சியாத் (22)த/பெ பசீர் மலப்புரம் கேரள மாநிலம் என்றும், 4,ஷகபாஸ் ( 26) த/பெ பசீர் மலப்புரம் கேரள மாநிலம் என்றும் தங்களது பெயர் முகவரிகளை கூறியவரிடம் அவர்களது நடத்தையில் சந்தேகம் இருந்ததால் உங்களிடம் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம் உள்ளது உங்களை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அவர்களின் அனுமதி பெற்று சட்டபூர்வமாக அவர்களையும் அவர்களது காரையும் சோதனை செய்த பொழுது முதலாவது எதிரியான முனீர் காட்டில் புரம் என்பவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பிளாஸ்டிக் கவரினுள் வெள்ளை நிற பொடி இருந்தது அதை சோதித்த பொழுது அது கடும் போதை தரக்கூடிய எம் டி எம் ஏ என்ற வகை போதைப் பொருள் என்று அறிந்து அதை எடை போட்டு பார்க்க அது 120 கிராம் எடை இருந்தது அதைப்பற்றி மூனிர் காட்டில் புரம் என்பவரை விசாரிக்க தான் மேற்படி போதை பொருளை நான்கு எதிரிகளும் சேர்ந்து பணம் போட்டு பெங்களூர் சென்று வாங்கி வந்து அங்கிருந்து குண்டல்பேட் வந்து அவருக்காக காத்திருந்த மீதமுள்ள மூன்று எதிரிகளுடன் சேர்ந்து மேற்படி காரில் வந்ததாகவும் போலீசார் தங்களை பிடித்துக் கொண்டதாகவும் கூறினார்.
இதன் பேரில் அவர்கள் நால்வர் மீதும் நீலகிரி மாவட்டம், மசனகுடி காவல் நிலைய போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி போதைப் பொருளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி சோதிக்கப்பட்ட பின்பு அது கடும் போதை தரக்கூடிய மெத்தம் பெட்டமின் என்ற போதைப் பொருள் என்று தெரியவந்தது இதுநாள் வரை மேற்படி வழக்கானது கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் முன்பாக விசாரணையில் இருந்து வந்தது இன்று விசாரணை முடிந்து எதிரிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் எதிரிகள் நால்வருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஒன்று இரண்டு மற்றும் நான்காம் எதிரிகளுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் மூன்றாவது எதிரிக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி திரு ராஜலிங்கம் அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினார். அபராதத்தை செலுத்த தவறினால் மீண்டும் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு.வெ. சிவகுமார் அவர்கள் ஆஜரானார்.
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!
கஞ்சா பறிமுதல் எட்டு பேர் கைது....!!!
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !