by Vignesh Perumal on | 2026-02-07 01:22 PM
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
2026, பிப்ரவரி 12 (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகள், மாவட்டத் தலைநகரங்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் அளவிலான முக்கிய இடங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
மத்திய அரசு தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதி (₹3,458 கோடி), நூறு நாள் வேலைத் திட்ட நிதி (₹2,000 கோடி), மற்றும் குடிநீர் இணைப்புத் திட்ட நிதி (₹3,112 கோடி) ஆகியவற்றை விடுவிக்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவி குறித்து பட்ஜெட்டில் மெளனம் காக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்து, அதன் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் 'இரட்டை அணுகுண்டு' தாக்குதல் எனச் சாடியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல், அதற்கு முட்டுக்கொடுப்பதாகக் கூறி அதிமுக-வுக்கு எதிராகவும் நடத்தப்படுகிறது. "தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதிமுக மெளனம் காப்பதும், டெல்லிக்கு அடிபணிந்து போவதும் தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம்" என திமுக கூட்டணி விமர்சித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னோட்டமாக, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 'அல்வா வழங்கும் போராட்டம்' நடத்தப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அல்வா கொடுக்கப்பட்டுவிட்டதைக் (ஏமாற்றப்பட்டதை) குறிக்கும் வகையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!