| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவன் கொலை....????

by admin on | 2026-02-08 12:11 PM

Share:


உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவன் கொலை....????

மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் (எ) செந்தில்குமார் (36) இவரது மனைவி காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தார்.

சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடையும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு செந்தில்குமார் டீக்கடையை திறப்பதற்காக வந்தார். 

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை அருவாளால் சரமாரியாக வெ*ட்டி கொ*ன்றனர். 

இது தொடர்பாக எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் சிலைமான் போலீசார் வ*ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி காவியாவுக்கும், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. 

கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியூர் சென்று விட்டனர். காவியாவின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தம்பதியை சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் காவியா, கார்த்திக்கிடம் செல்போனில் அடிக்கடி பேசி தொடர்பை நீடித்து வந்துள்ளார்.

வீட்டிலிருந்த பணத்தையும் அவரிடம் அதிகளவில் கொடுத்துள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதையறிந்த செந்தில்குமார் கோபமடைந்து, மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு அவனியாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு காவியா சென்றுள்ளார். 

அப்போது பெற்றோர், கணவருடன் சேர்ந்து வாழ். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே செல் எனக் கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த காவியா அவனியாபுரம் போலீசில் தந்தை மீது புகார் கொடுத்துள்ளார். போலீசார் தந்தையை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். நடந்த சம்பவம் அனைத்தையும் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். ன அப்போது, இனி என் கணவர் உ*யிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது. அவரை ஏதாவது செய்து விடு’’ என்று கார்த்திக்கிடம் காவியா கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை தீர்த்துக் கட்ட முடிவு செய்த கார்த்திக், நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ மற்றும் டூவீலரில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாரின் டீக்கடைக்கு வந்துள்ளனர்.

அப்பகுதியில் மது அருந்தி விட்டு, விடிய, விடிய காத்திருந்துள்ளனர். மறுநாள் டீக்கடையை திறக்க வந்த செந்தில்குமாரை, ப*யங்கர ஆயுதங்களால் வெ*ட்டி கொ*ன்றுள்ளனர். 

இக்கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் க*ள்ளக்கா*தலன் கார்த்திக் உட்பட 3 பேர், சிலைமான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் காவியாவும் கைது செய்யப்பட்டார்.முறையற்ற உறவு ஒரு குடும்பத்தையே சிதைத்து விட்டது. இது தேவையா??

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment