by Vignesh Perumal on | 2025-08-04 02:25 PM
டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து, அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா, நேற்று காலை டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இந்தத் தாக்குதலில், எம்.பி. சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.பி. சுதா உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை விரைவாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும்.
உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்