| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

"தி.மு.க. கூட்டணிக்கு ஓ.பி.எஸ். வந்தால்"...! திருமாவளவன் பதில்...!

by Vignesh Perumal on | 2025-08-04 10:38 AM

Share:


"தி.மு.க. கூட்டணிக்கு ஓ.பி.எஸ். வந்தால்"...! திருமாவளவன் பதில்...!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால், அது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வின் பிடியிலிருந்து வெளியே வந்ததே மகிழ்ச்சிதான்" என்று கூறினார். மேலும், "ஓ.பி.எஸ்., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வந்தால், அது வி.சி.க.வுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் நல்லிணக்கத்துடன் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வோம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு, ஓ.பி.எஸ். விரைவில் தி.மு.க. கூட்டணியில் இணையலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், திருமாவளவனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.




நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment