| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

ஹோட்டலில் கேஸ் கசிவு...! தீ விபத்து...! விரைந்து வந்து வீரர்கள்...!

by Vignesh Perumal on | 2025-08-04 11:41 AM

Share:


ஹோட்டலில் கேஸ் கசிவு...! தீ விபத்து...! விரைந்து வந்து வீரர்கள்...!

திண்டுக்கல், என்.ஜி.ஓ. காலனி, நாகா மில் எதிரே உள்ள பாக்யா ஹோட்டலில் கேஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.

ராஜகோபால் என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டலில் இன்று காலை கேஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் போராடித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், ஹோட்டலில் இருந்த சில பொருட்கள் சேதமடைந்தன.

கேஸ் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment