by Vignesh Perumal on | 2025-08-04 11:19 AM
திண்டுக்கல்லில் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்க உள்ள 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புத்தகத் திருவிழா குறித்த விளம்பரப் பிரசுரங்கள் ஆட்டோக்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் ஒட்டப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புத்தகத் திருவிழா குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த விழிப்புணர்வுப் பரப்புரை நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.