| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு...!!!!

by admin on | 2026-11-27 07:00 PM

Share:


தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு...!!!!

தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது - உச்சநீதிமன்றம். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ஒவ்வொரு பக்தரும் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு. தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் அரவிந்த் குமார், பஞ்சோலி அமர்வு ஆணை.மலை அமைந்துள்ள முழு பகுதியையும் CRPF பாதுகாப்பு படையினை நிறுத்த உத்தரவு. மாநில அரசும் கோயில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன.இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும்.  கோயில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது - உச்ச நீதிமன்றம்.


திருப்பரங்குன்றம் வழக்கு - உச்ச நீதிமன்ற உத்தரவின் சுருக்கம்:

1. நாளை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

2. மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில், ஒவ்வொரு பக்தரும் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

3. கோயில் மற்றும் தர்காவிற்குப் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய ரிசர்வ் காவல் படைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

4. சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் நிர்வாகிகளாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

5. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

6. தமிழகத் தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி, அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  கோயில் செயல் அலுவலர்  மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

7. தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் "நிர்வாகச் சீர்கேடு" நிலவுவதாகத் தெரிகிறது என்றும், நிர்வாக அதிகாரிகள் தங்களின் அரசியல் தலைவர்களின் ஆணைகளுக்கு ஏற்பச் செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் டிசம்பர் 15-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment