| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கன்னியாகுமரியில் குடும்பத்தினர் கண் முன்னே கொடூர கொலை.....???

by admin on | 2026-11-27 12:18 PM

Share:


கன்னியாகுமரியில் குடும்பத்தினர் கண் முன்னே கொடூர கொலை.....???

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்பத்தினர் கண்முன்னே கொடூரம்: திங்கள்சந்தை அருகே துபாயிலிருந்து வந்த இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

 கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை அடுத்த காட்டுவிளை பகுதியில், வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞர் ஒருவர், அவரது குடும்பத்தினர் கண்முன்னே மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தமிழகத்தையும்உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தின் நெஞ்சை உறைய வைக்கும் காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

சம்பவத்தின் பின்னணி:

காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 26 வயதான சமீம், துபாயில் பணியாற்றி வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய சமீம், தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வந்தார். ஆனால், ஊருக்கு வந்த இரண்டே நாட்களில் அவருக்கு இப்படியொரு கொடூர முடிவு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சமீமுக்கும், அவரது முன்னாள் நண்பரான முகேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து, வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும், சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நெஞ்சை உறைய வைக்கும் தாக்குதல்:

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், சமீமைத் திட்டமிட்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்த கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களுடன் அவரைச் சூழ்ந்துள்ளது. ஆபத்தை உணர்ந்த சமீம் உயிர் பிழைக்கத் தப்பியோட முயன்றபோதும், அந்தக் கும்பல் அவரது குடும்பத்தினர் அலறித் துடிக்க, கண்முன்னே ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சமீம், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறை தீவிர வேட்டை:

உயிரிழந்த சமீமின் தாயார் அளித்த புகாரின் பேரில், இரணியல் காவல்துறையினர் முகேஷ் மற்றும் அடையாளம் தெரிந்த இரண்டு நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனிப்பட்ட முன்விரோதம் மட்டும்தானா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை தேவை

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை:

"சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் அச்சமின்றி, ஒரு இளைஞரை அவரது குடும்பத்தினர் கண்முன்னே குடியிருப்புப் பகுதியில் வைத்து ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்திருப்பது மிகுந்த வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.வெளியாகியுள்ள காணொளி காட்சிகள் சமூகத்தில் சட்டம்-ஒழுங்கு என்ற கேள்வியை எழுப்புகிறது. வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, குடும்பத்தைப் பார்க்க வந்த ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும். இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாத வண்ணம் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.


தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment