| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

NEET விலக்கு - தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!

by satheesh on | 2026-04-02 11:07 AM

Share:


NEET விலக்கு -  தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!

 ₹2000 மகளிர் தொகை + NEET விலக்கு: பாமக தேர்தல் வாக்குறுதிகள் :

பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

1. அரசுப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தரமான இலவச கல்வி வழங்கப்படும். ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும்.

2. கடந்த 10 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 75 லட்சத்தில் இருந்து 45 லட்சமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 35 லட்சத்தில் இருந்து 65 லட்சமாக அதிகரித்துள்ளது.

3. 60 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆறாம் வகுப்பு முதல் புத்தகப்பை இல்லா கல்விமுறை அறிமுகப்படுத்தப்படும். 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்படும்.

4. மாணவர் இடைநிற்றலைத் தடுக்க ஏழை மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பில் மாதம் ரூ.500, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும்.

5. கடந்த தேர்தல் அறிக்கையில் "நீட் தேர்வு விலக்கு" என்று குறிப்பிட்ட திமுக தற்போது அதனை நீக்கியுள்ளது. தமிழகத்தில் நீட் விலக்கு பெற பாமக வலியுறுத்தும். தரமான கல்வியும் தரமான மருத்துவமும் இலவசமாக வழங்கப்படும்.

6. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படாது.

7. தமிழகத்தில் தற்போது 1300 "108" ஆம்புலன்ஸ்கள் உள்ளன. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 70 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. பாமக ஆட்சிக்கு வந்தால் அது 2500 ஆக அதிகரிக்கப்படும்.

8. ஆண்டுதோறும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.

9. மகளிர் தொகை ரூ.2000 வழங்கப்படும்; அனைத்து பெண்களுக்கும் இது வழங்கப்படும். தமிழகத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

10. தமிழகத்தில் சமூக நீதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். "சாதி" என்ற சொல்லுக்கு எதிர்ப்பு இருப்பதால் "சமூக நீதி கணக்கெடுப்பு" என குறிப்பிடப்படுகிறது.

11. சமூக நீதியை திமுக 100 அடி ஆழத்தில் புதைத்துவிட்டதாக குற்றச்சாட்டு. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

12. திமுக ஊழலை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும். தொழில் முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

13. திமுக ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மட்டுமே கிடைத்துள்ளது. 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.

14. தமிழகத்தில் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000 திரைப்படங்கள் வெளியாகவில்லை. திமுக முதல் குடும்பம் சினிமா துறையை கட்டுப்படுத்தி வருகிறது என குற்றச்சாட்டு. சினிமா துறையினர் திமுக ஆட்சிக்கு எதிராக உள்ளனர். "சினிமா சிண்டிகேட்" முடிவுக்கு கொண்டுவரப்படும்.

15. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும்.

பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 74 ஆண்டுகளில் 4.56 லட்சம் கோடி நேரடி கடன் இருந்தது. ஆனால் 2021 முதல் 5 ஆண்டுகளில் திமுக அரசு 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் வாங்கி இலவசங்களை வழங்குவது ஒரு நிர்வாகமா? என கேள்வி எழுப்பினார்.


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment