by satheesh on | 2026-03-29 10:04 AM
புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி!
அதிமுக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுவில் உள்ள நடிகை கவுதமியும் எடப்பாடி பழனிச்சாமி மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம். "ராஜபாளையம் தொகுதி உனக்குததான், அதிமுக சார்பில் தேர்தல் வேலையை நீங்கள் ஆரம்பித்து விடுங்கள் " என்று கவுதமிக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாராம் எடப்பாடி. இதனால், அந்த தொகுதியில் கடந்த 4 மாதங்களாக கவனம் செலுத்தி வந்துள்ளார் கௌதமி. மேலும், இந்த வேலைகளுக்கு பல லட்சங்களையும் செலவு செய்திருக்கிறார். இந்த சூழலில், ராஜபாளையம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டார் தலைவர். இதற்கு எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கக் கூடாது. தொகுதிகள் முடிவானதற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என சொல்லியிருந்தால் நான் பல லட்சங்களை செலவு செய்யாமல் இருந்திருப்பேன் என்று கதறாத குறையாக புலம்பி வருகிறார் நடிகை கௌதமி. இதைப்பற்றி பேசவும், வேறு ஒரு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் எடப்பாடியை பலமுறை கௌதமி தொடர்பு கொண்டும் அவரது ஃபோனை அட்டென்ட் பண்ணவில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் அவர் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறார் கௌதமி. அதேபோல, தனது நண்பர் ஒருவருக்கு ராஜபாளையம் தொகுதியை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்திருந்தார் பாஜக நயினார். இது குறித்து எடப்பாடியை சந்தித்து, ராஜ பாளையத்தை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி வாத்திருந்தார் நயினார் நாகேந்திரன்.எடப்பாடியும் இதற்கு ஓகே சொல்லியிருந்துள்ளார். ஆனால், கடைசியில் நயினாருக்கும் No சொல்லிவிட்டார் எடப்பாடிபழனிச்சாமி. இதனால் நயினாரும் எடப்பாடி மீது செம கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் பாஜகவினர்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !