by Vignesh Perumal on | 2026-03-28 10:30 PM
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும். இந்நிலையில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
புதுச்சேரியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகள் (முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கட்சி). பாஜக 10 தொகுதிகள். அதிமுக 2 தொகுதிகள். லட்சிய ஜனநாயக கட்சி (LJK) 2 தொகுதிகள் என போட்டியிடுகின்றனர்.
மார்ச் 27-ம் தேதியுடன் வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகளுக்கு நேரடிப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) என்.ஆர்.காங்கிரஸ் + பாஜக + அதிமுக + LJK. காங்கிரஸ் + திமுக. (காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன). நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன.
கடந்த மார்ச் 1-ம் தேதி அரசு விழாக்களுக்காகப் பிரதமர் புதுச்சேரி வந்திருந்த நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்ற "Double Engine Government" முழக்கத்தை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியினர் மாநில சுயாட்சி மற்றும் மத்திய அரசின் தலையீடு போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !