by Vignesh Perumal on | 2026-03-28 09:49 PM
திண்டுக்கல் மாநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் நகர் உட்கோட்ட டி.எஸ்.பி (DSP) கார்த்திக் அவர்களின் நேரடி மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையிலான குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இக்குழுவில் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ரோந்து குழுவினர் R.V. நகர், கந்தகோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
எனவே, விஜயகுமார் (44) - NGO காலனி, ராமர் காலனியைச் சேர்ந்தவர், பாஸ்கர் (40) - மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர், பூபாலன் - YMR பட்டியைச் சேர்ந்தவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1.5 கிலோ (ஒன்றரை கிலோ) எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் (டூவீலர்கள்). கஞ்சா விற்பனைக்குத் துணையாக இருந்த 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போதைப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாரிடமிருந்து கஞ்சாவைப் பெற்று வந்தார்கள் மற்றும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து நகர் தெற்குப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது "குண்டர் தடுப்புச் சட்டத்தின்" கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !