| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

வீரத்தமிழர் மக்கள் கழகம் அதிமுகவிற்கு ஆதரவு.....!!!

by admin on | 2026-03-28 05:16 PM

Share:


வீரத்தமிழர் மக்கள் கழகம் அதிமுகவிற்கு ஆதரவு.....!!!

வீரத்தமிழர் மக்கள் கழகம் தேர்தல் நிலைப்பாடு சம்பந்தமாக மாநில தலைமையகம் செய்தி  வெளியீடு இன்று தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இல்லம் அமைந்து இருக்க கூடிய பசுமை வழி சாலையில்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வீரத்தமிழர் மக்கள் கழகத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் பந்தல் ராஜா 

மாநில அவைத் தலைவர் கார்த்திகேய பாண்டியன் 

மாநில தலைமை நிலைய செயலாளர் சந்தோஷ், 

மாநில பொருளாளர் 

சுபிராஜ் முருகேசன் 

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பிஎஸ்ஏ மாதவன் பிள்ளை மாநில செய்தி மற்றும் ஊடக பிரிவு செயலாளர் தேனி உதயா 

மாநில இளைஞரணி இணைச் செயலாளர் எம்.பி ராஜ்குமார் மற்றும் திண்டுக்கல் திருநெல்வேலி தேனி மதுரை சென்னை விருதுநகர் தூத்துக்குடி சிவகங்கை ராமநாதபுரம் திருப்பூர் கோவை கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் இதில் நமது மாநில பொதுச் செயலாளர் பந்தல் ராஜா அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடத்தில் அரசியல் அங்கீகாரம் பிரதிநிதித்துவம் மற்றும் வெள்ளாளர் சமூக கோரிக்கைகள் உற்பட பல்வேறு கோரிக்கைகள்  தெரிவிக்கப்பட்டது.  அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வருங்கால முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் உறுதி அளித்தார்கள். 

வீரத்தமிழர் மக்கள் கழகத்தின் சார்பாக நமது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு கடிதத்தை ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்தில் நமது மாநில பொதுச் செயலாளர் பந்தல் ராஜா அவர்கள் வழங்கினார்கள் பின்பு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் வீரத்தமிழர் மக்கள் கழக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment