by satheesh on | 2026-03-26 05:15 PM
20 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது :
விபத்தை ஏற்படுத்தியவர் மீதும் வந்த நபர் மீதும் ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவி மீது கார் எதிரில் மாணவி சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். சம்பவம் இடத்திற்கு திரண்டு வந்த நெல்கட்டும் சுவரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார்கள் ஊர் மக்கள் திரண்டு வந்து மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் 20 மணி நேரமாக நடைபெற்றது. அதன் பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து,ஊர் முக்கிய பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் இவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சுரேஷ்குமார், மகேஷ் குமார், வழக்கறிஞர் குமார் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், குற்றத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முள்ளிகுளத்தை ராம்காந்த் (42) , காரில் பயணம் செய்த இலஞ்சியை சேர்ந்த செந்தில் ராஜா (32) ஆகிய இருவர் மீது 304, 105 ஆகிய பிரிவினில் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இழப்பீடு வழங்குவதற்கு பள்ளி நிர்வாகம் முன் வந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது அதன் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய மத்தியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார்களிடம் தகவலை தெரிவித்தனர் . அனைவரும் இதனை ஏற்று கலைந்து சென்றனர் 20 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் முடிவுக்கு வந்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் போக்குவரத்து சீரானது
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !