by satheesh on | 2026-03-26 04:53 PM
கே.என்.நேரு மீதான முறைகேடு விவகாரம்: நீதிமன்றம் சரமாரி கேள்வி!
நகராட்சி நிர்வாகத்தில் 2,538 நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், வழக்குப்பதிவு செய்யும்படி கடந்த அக்டோபரில் அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு கடிதம் இதன் அடிப்படையில் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கல் செய்த வழக்கில், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் ஏன் நிறைவேற்றவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி - அதற்கு, ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்ய அரசின் அனுமதி தேவை என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பதில். - வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும், அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு ! முடிவுக்கு வந்த போராட்டம் !!
கே என் நேரு மீதான முறைகேடு வழக்கு ! நீதிமன்றம் சரமாரி கேள்வி !!
விளாத்திகுளம் சம்பவம் - எஸ் வி சேகர் சர்ச்சை பேச்சு !
ஓசி சிகரெட் - மறுத்த கடைக்காரரை அறிவாளால் வெட்டிய பயங்கரம் ! போதை கும்பல் அட்டகாசம் !!
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!