by satheesh on | 2026-03-26 02:17 PM
விளாத்திகுளம் சம்பவம் - இதெல்லாம் ஒரு கருத்தா எஸ்.வி.சேகர்?*
விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், சர்ச்சையாக பேசி இருக்கிறார் நடிகரும் திமுக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர். "அந்தப் பெண் புதருக்கு பின்னால் போய் மறைந்து நின்று கொண்டிருந்தார். அப்போது வந்துவிட்டார்கள் எனக் கூறுகிறார்கள். ஏன் அந்தப் பெண் புதருக்கு பின்னால் போகணும்? போலீஸ் தெருவிளக்கு போடுவார்களா? இல்லையென்றால் புதருக்கு லைட் போடுவார்களா? பெண் குழந்தையின் அருமை தெரியாமல் பேசவில்லை. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கடைக்குகூட நாங்கள் அனுப்பமாட்டோம். வாட்ச்மேன் போகட்டும். நம்மை நம்பி வந்த பெண்களுக்கு நாம்தான் பாதுகாப்பு கொடுக்கணும்; எல்லா வேலையையும் போலீஸ் எப்படி செய்ய முடியும்? ஒவ்வொரு பெண் குழந்தைகளின் தாய், தந்தையர்கள் அவர்களின் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் காட்டுக்குள் பாத்ரூம் போவதாக இருந்தால்கூட, துணைக்கு யாராவது போகணும். ஏனென்றால் சுதந்திரம் வேறு. பாதுகாப்பு வேறு; முதலில் நாம் பாதுகாப்பாக இருக்கணும். எங்க வீட்டு பீரோவை பூட்டாமல் போய்விட்டேன்; திருடன் எடுத்துச் சென்றுவிட்டால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என நான் கூற முடியுமா?" இப்படி பேசியதற்கு, "இதெல்லாம் ஒரு கருத்தா எஸ்.வி.சேகர்" என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !