by satheesh on | 2026-03-25 07:54 PM
"ஜகா" வாங்கும் நிர்வாகிகள் ! வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் - தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறார் விஜய் :
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்க, தமிழக வெற்றி கழகம் எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என விஜய் மேடைக்கு மேடை கூவி கூவி அழைத்தாலும், எந்த கட்சியும் தவெக உடனே கூட்டணி அமைக்க முன் வரவில்லை. மாறாக தவெக செங்கோட்டையன் சேர்ந்த பின்பு அடுத்தடுத்து அதிமுக,திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை செங்கோட்டையன் அழைத்து வருவார் என நம்பிக்கையில் இருந்தார் விஜய். குறிப்பாக அவர் வருகிறார், இவர் வருகிறார், இவர் மட்டும் வரவில்லை இவருடன் அவரும் வருகிறார் என தவெக தரப்பு தொடர்ந்து பேசி வந்து கொண்டிருக்க, கடைசியில் செங்கோட்டையனே ஏன்டா தவெக வந்தோம் என்கிற நிலையில் இருப்பதாகவும், குறிப்பாக செங்கோட்டையன் உடன் தவெக வில் இணைந்தவர்கள், இவருடன் நாம் ஏன் வந்தோம் என புலம்பி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் ஹய்யா மும்பையில் நடக்கும் இயக்குனர் அட்லீ மனைவி வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றுள்ளார் விஜய், அந்த வகையில் விஜய் இன்னும் அரசியலில் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறாரா, அல்லது தவெக கட்சியை ஆதவா அர்ஜுனாவிடம் லீசுக்கு விட்டு விட்டு பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டு பேசுவேன் என்கிற முடிவில் இருக்கிறாரா என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய தவெக நிலைமை படு மோசமாக இருந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 60 வேட்ப்பாளர்களை தேர்வு செய்து இருக்கிறது தவெக , அதில் தேர்தல் செலவுக்காக சுமார் குறைந்தது 5 கோடி பணம் கையிருப்பு உள்ளவர்களுக்கே சீட் வழங்கப்படும் , ஆகையால் தங்களிடம் 5 கோடி ரூபாய் பணம் கையிருப்பு இருப்பதை உறுதி படுத்தினால் மட்டுமே சீட் என தவெக தலைமை தெரிவித்ததாக கூறப்படுகிறது. என்னாது 5 கோடி ரூபாய் பணமா என்று வாயை பிளந்த தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களில் சுமார் 40 மாவட்ட செயலலாளர்கள், போதும் சாமி, எங்களுக்கு சீட்டே வேண்டாம் என பேக் அடித்ததாக கூறப்படுகிறது, குறிப்பாக எங்களிடம் சொத்துக்களாக உள்ளது பணமாக இல்லை என இதில் சிலர் பின் வாங்கி இருக்கிறார்கள், அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 60 நபர்களை வேட்ப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டதில் 40 பேர் பின்வாங்க மீதம் 20 பேர் மட்டும் சீட் வாங்கும் விருப்பத்தில் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த 20 நபர்களில் 11 பேர் NDA கூட்டணியில் தவெக இணையும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து இருக்கிறார்கள், இறுதியில் NDA கூட்டணியில் தவெக இடம் பெறாது, தனித்து தான் போட்டியிட போகிறது என்றது , தனித்து நீங்கள் போட்டியிட நாங்கள் பலியாடா ஆக தயராக இல்லை என அந்த 11 பெரும் எங்களுக்கு சீட் வேண்டாம் என பின் வாங்கியுள்ள நிலையில் தற்பொழுது 234 தொகுதியில் சொந்த பணத்தை செலவு செய்து தேர்தலில் போட்டியிட மொத்தத்தில் 9 பேர் மட்டுமே தவெக வில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய், ஆதவா அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் , அருண் ராஜ், நிர்மல் குமார் உட்பட வெறும் 9 பேர் தான் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட தயாராக இருப்பதால், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட தவெக கைவசம் வேட்பாளரே இல்லாத ஒரு சூழல் உருவாகி இருக்கிறது, இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தவெக சிக்கி தவித்து கொண்டிருக்க, இன்னும் சில நாட்களில் வேட்பு மனு தாக்கலும் தொடங்க இருக்கும் நிலையில், இதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் மும்பையில் நடக்கும் அட்லீ மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் தனி விமானத்தில் பறந்து இருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!
"ஜகா "வாங்கும் நிர்வாகிகள் - வேட்பாளர்களுக்கு டிமாண்ட் ! த வெ க விற்கு சிக்கலா ..?
பள்ளி வளாகத்தில் கார் மோதி சிறுமி உயிரிழந்த பயங்கரம் ! விடிய விடிய சாலை மறியல் !! போக்குவரத்து கடும் பாதிப்பு - பதற்றம் !!!
பதறிப்போன ஊழியர்கள்...!பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்...!
சாத்தான்குளம் சம்பவம் - 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு ! உச்சபட்ச தண்டனை வழங்க கோரிக்கை !!