by satheesh on | 2026-03-25 05:24 PM
புளியங்குடி : பள்ளி மாணவிகளின் மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் நான்uகு வயது மாணவி உயிரிழப்பு. ஊர்மக்கள் கொதிப்பு சாலை மறியல் . பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான ஆஸ்பத்திரி மீது சரமாரி தாக்குதல்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள கண்ணா இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த நெல்கட்டும் சேவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி இவரின் ஒரே மகள் சிவயாழினி (4) பள்ளியில் படித்து வந்தார் நேற்று மாலை நேரத்தில் மாணவி வீட்டுக்கு வராமல் மாணவியனுடைய புத்தகப் பைகள் மட்டும் வந்ததை தொடர்கள் பெற்றோர்கள் எங்கள் குழந்தையை எங்கே என கேட்டதற்கு உடன் வந்த பள்ளி மாணவிகள் யாழினி மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் விபத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் கிராமத்தில் உள்ளவர்களை ஒட்டு மொத்தமாக திரட்டி வந்து மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை சிந்தாமணி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் பள்ளிக்கு அனுப்பிய எனது குழந்தை என்ன ஆனது எப்படி இறந்தது என்கின்ற உண்மை தன்மையை தெரியாத வரை இப்பகுதியில் இருந்து களைந்து செல்ல மாட்டோம் எனக் கூறினர். பள்ளிக்குள் வேகமாக வந்த பள்ளியின் கார் மாணவியின் மீது ஏறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது மாணவி இறப்புக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்த மாணவிக்காக விடிய விடிய போராட்டம் :
தென்காசி புளியங்குடி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய பேச்சு வார்த்தை நடத்தவில்லை என உறவினர் 13 - மணி நேரத்திற்கு மேலாக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மீது நேற்று சொசுகு கார் மோதி உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த பள்ளி சிறுமியின் உறுவினர்கள் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை உள்ள சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வந்த நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவில்லை என கூறிய சாலை மறியலில் செய்த மாணவியின் உறவினர் இரவு மீண்டும் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர் அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் ஆத்திரமடைந்து உறவினர்கள் பள்ளி வளாகத்திற்குள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் கதவின் கண்ணாடிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் இருந்து டிஜிட்டல் போர்டு உள்ளிட்டவை உடைந்து சேதம் அடைந்தது தொடர்ந்து அங்கிருந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற பள்ளி சிறுமியின் உறுப்பினர்கள் மீண்டும் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை 13 -மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் :N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விளாத்திகுளம் சம்பவம் - சமூக வலைதளங்களில் சிறுமி புகைப்படம் வெளியீடு ! வழக்குகள் பதிவு !!
"ஜகா "வாங்கும் நிர்வாகிகள் - வேட்பாளர்களுக்கு டிமாண்ட் ! த வெ க விற்கு சிக்கலா ..?
பள்ளி வளாகத்தில் கார் மோதி சிறுமி உயிரிழந்த பயங்கரம் ! விடிய விடிய சாலை மறியல் !! போக்குவரத்து கடும் பாதிப்பு - பதற்றம் !!!
பதறிப்போன ஊழியர்கள்...!பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்...!
சாத்தான்குளம் சம்பவம் - 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு ! உச்சபட்ச தண்டனை வழங்க கோரிக்கை !!