by satheesh on | 2026-03-24 05:48 PM
தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாடு ! மது பிரியர்கள் அப்செட் !! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள் !!!
தமிழகத்தில் 4800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதோ அந்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமான வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் கட்சி தலைவர்களை விட எந்த அவசர தேவைக்கும் பணம் கொண்டு போக முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு மது விநியோகிப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 4,800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை மற்றும் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தேர்தல் ஆணையம் எளிதாக கண்காணிக்க முடியும். ஏதேனும் ஒரு டாஸ்மாக்கில் திடீரென 30 சதவீதத்திற்கு அதிகமாக விற்பனை அதிகரித்தால் அந்த கடையில் தீவிரமான சோதனைகள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக மதுவை வாங்கி பதுக்குவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 50 சதவீதத்திற்கு அதிகமாக மதுபானங்களை இருப்பில் வைக்க கூடாது தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போதும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாட்களிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் மதுபானம் விநியோகிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். சட்டப்படி இது குற்றம் என்றாலும், மறைமுகமாக இது போன்ற நடவடிக்கைகள் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்த முறையை ஒழிப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமான கண்காணிப்பில் இறங்கியுள்ளது. டிஜிட்டல் பில்லிங் முறை அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கடைகளிலும் தினசரி எவ்வளவு மதுபானங்கள் விற்கப்படுகின்றன, இருப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை உடனடியாக அதிகாரிகளால் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தனியார் மதுபான கூடங்களுக்கு பொருந்துமா ? என எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சாத்தான்குளம் சம்பவம் - 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு ! உச்சபட்ச தண்டனை வழங்க கோரிக்கை !!
மது விற்பனைக்கு கட்டுப்பாடு ! மதுப்பிரியர்கள் அப்செட் !! டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல் !!!
46 சவரன் நகை திருடிய ஆசாமி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !
பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம்...! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு...!
கலெக்டர், எஸ்பி...! வாக்கு எண்ணும் மையத்தில் அதிரடி ஆய்வு...!