by satheesh on | 2026-03-24 05:03 PM
பூட்டிய வீட்டில் 46 பவன் நகை கொள்ளை. தொழில் நுட்ப விசாரணையில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து திருட்டு நகையை மீட்டு குமரி மாவட்ட காவல்துறை அதிரடி !
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குறும்பனை பகுதியை சேர்ந்த சுஜின் மோன் என்பவரது மனைவி மேரி கிபி லின்சா என்பவரது வீட்டை உடைத்து 45 பவுன் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகார் சம்பந்தமாக குளச்சல் காவல் நிலைய குற்ற எண் 67/2026 U/S 331(4), 305(6) BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா ஆர்.நங்லட் அவர்களின் மேற்பார்வையில் குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் . தொழில்நுட்பம் சம்பந்தமான விசாரணை செய்யப்பட்டது.இந்நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்டது முட்டம் பகுதியை சேர்ந்த தாசன் என்பவரது மகன் சகாய ஜோஸ் ஆண்டனி என்பவர் என்று தெரிய வந்தது. குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருட்டுப் போன முழு நகைகளும் மீட்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றி குற்றவாளி கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !